ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்று ஆர்டர் செய்து 830 புகார்களில் இரண்டு கோடியே முப்பத்தி இரண்டு லட்ச ரூபாய் (2,32,00,000) பணத்தை இழந்த புதுச்சேரி மக்கள்...
பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் பொருட்களை வாங்குவது கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க அமேசான், டாட்டாகிளிக், ஏஜியோ, ப்ளிப்கார்ட் போன்ற வாங்குதலங்கள் ஆகும்.
தற்போது இருக்கின்ற இணையதள வசதிகளில் நாம் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு வாங்குதலங்கள் வந்துவிட்டது. நாம் மேலே சொன்னது போன்று மிகப்பெரிய வாங்குதலங்களில் சென்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க தேடி பார்த்துவிட்டு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று இணையதளத்தில் இருந்து வெளியே வந்து விட்டால் நாம் வாங்குதலங்களில் எந்த பொருட்களை தேடினோமோ அதே பொருள் மிக மிக குறைந்த விலையில் உங்களுக்கு தருகின்றோம் என்று முன்னணியாக இருக்கின்ற பேஸ்புக் whatsapp மிக குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக flipkart-ல் 900 ரூபாய்க்கு நாம் தேடிய ஒரு டிரஸ் இன்ஸ்டாகிராமில் அதே டிரஸ் 215 ரூபாய் என்று நமக்கு மேலே சொன்ன சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் வரும் உடனடியாக அதே ஆடை அதே பிராண்ட் அதே கலர் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி ஆர்டர் செய்தால் நமக்கு எந்த பொருளும் வராது. இதுபோன்று கடந்த 9 மாதங்களில் மட்டும் 830 புகார்கள் வந்துள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஆர்டர் செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் மொத்தமாக ஹோல் சேலில் ஆடைகள் விற்பனை செய்கிறோம். பல்வேறு பொருட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு எடுத்துக்காட்டாக லிப்ட் மிஷினரி பொருட்கள் மோட்டார் உதிரி பாகங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை மார்க்கெட் விலையை விட பாதி விலைக்கு, ஹோல் சேல் விலைக்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது அந்த நிறுவனங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் விசாரிக்காமல் சரி பார்க்காமல் அவர்களுடைய சமூக வலைதள விளம்பரத்தை மட்டும் நம்பி பொதுமக்கள் அவர்களிடம் ஆர்டர் செய்து அவர்களிடமிருந்து எந்த பொருளோ அல்லது அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் அதிக அளவில் பணத்தை இழக்கிறார்கள். இதுபோன்று 830க்கும் மேற்பட்ட புகார்கள் கடந்த 9 மாதங்களில் பதிவாகியுள்ளது மேற்படி மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள எந்த ஒரு விலாசம் மொபைல் எண்கள் கிடைப்பதில்லை வங்கி பரிவர்த்தனையை வைத்து மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களை பிடிப்பது மிக சிரமமாக இருப்பதால் இதுபோன்று பொது மக்களை குறைந்த விலைக்கு பொருட்களை தருகிறோம் என்று சொல்லி இணையவழி மோசடிக்காரர்கள் அதிக அளவில் ஏமாற்றி வருகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சைக்கிள், பட்டாசு பாக்ஸ், செல்போன் உதிரி பாகங்கள், அனைத்து வகை செல்போன், வீட்டு உபயோக பொருட்கள், குக்கர், மிக்ஸி, லேப்டாப், மரசாமான்கள், ஷு, வாட்ச், கண்ணாடி, அனைத்து வகையான துணி வகைகள் மற்றும் ரெடிமேடு ஆடைகள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், டிவி மற்றும் அனைத்து வகையான பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் தருகிறோம் 50% தள்ளுபடி விலையில் தருகிறோம் என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், telegram போன்ற சமூக வலைதளங்களில் வருகின்ற விளம்பரங்களை நம்பி ஆர்டர் செய்தால் 100% நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் ஆகவே நம்பிக்கையான பெரிய வாங்குதலங்களில் மட்டும் பொருட்களை வாங்கி இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க புதுச்சேரி இணைவழிப் போலீசார் அறிவுறுத்துகின்றோம். இணைய வழியில் வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த பொருட்களையும் ஆர்டர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இணைய வழி காவல் நிலையம், புதுச்சேரி காவல்துறை தகவல்.
No comments