தந்தையின் இறப்பின் துயரத்தில் இருந்து வந்த மகன் சங்கர் 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ரயிலில் அடிபட்டுஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 35 வயதான இவரின் தந்தை நாராயணன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள சென்னை மதுரை செல்லும் ரயில்வே வழிதடத்தில் ரயில் மோதி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இந்த நிலையில் தந்தை உயிரிழந்த இடத்தில் 20 ஆண்டுகளாக தினந்தோறும் சங்கர் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுது வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தந்தை மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பால் 20 ஆண்டுகளாக தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் துயரத்தில் இருந்து சங்கர் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு தந்தை இறந்த இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது
அப்பொழுது சுயநினைவை இழந்து தந்தையை நினைத்து அழுது கொண்டிருந்தாக கூறப்படுகிறது. சங்கர் மீது அந்த பாதையில் வந்த ரயில் மோதியதில் சங்கர் துண்டு துண்டாகி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சங்கரில் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர் மேலும் தந்தை உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் இருந்து வந்த சங்கர் தற்பொழுது 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments