திருப்பத்தூரில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு செயல்முறை விளக்கம் மற்றும் போலி பயிற்சிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் உத்தரவுப்படி மாவட்ட பழங்குடி நல அலுவலர் (தனி துணை ஆட்சியர்) தலைமையில் வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு செயல்முறை விளக்கம் மற்றும் போலி பயிற்சிகள் நடைபெற்றது. கொரட்டி ஊராட்சி ஆதியூர் மதுரா இராவுத்தம்பட்டி கிராம சர்வே எண் : 701 / - ல் உள்ள ஏரியில் 14.10.2024 இன்று காலை 11.05 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு செயல்முறை விளக்கம் மற்றும் போலி பயிற்சிகள் மதிப்பிற்குரிய மாவட்ட பழங்குடி நல அலுவலர் தனி துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் அவர்கள், மண்டல துணை வட்டாட்சியர் முன்னிலையில் தீயணைப்பு துறையின் மூலம் ஊர் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. உடன் வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர் ,ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிராமிய காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் .
No comments