திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கே.பி.ஏ. மஹாலில், மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க. தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மஞ்சுளா மாநில மகளிர் தொண்டர் இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார் மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர். மாலதி நாராயணசாமி மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார் சாந்தி சீனிவாசன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசோகன் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணிகள் அமைப்பாளர்கள் நகர ஒன்றிய பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்.
No comments