தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காலாண்டு விடுமுறை முடிவதற்கு முன்பே திறக்கப்பட்ட பள்ளிகள்.
தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் கடந்த 27ந்தேதி முடிவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலில் அக்டோபர் இரண்டாம் தேதி வரை விடுமுறை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து அந்த கோரிக்கையை தொடர்ந்து அக்டோபர் ஆறாம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புக்குள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிவதற்கு முன்பே சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வரச் சொல்லி தங்களை கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர், சில பள்ளிகள் பள்ளி சீருடையில் மாணவர்களை வரச் சொல்லி உள்ளனர்.
தமிழக அரசு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, என்று அறிவுறுத்திருந்த நிலையில் கோவில்பட்டி பகுதியில் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.
No comments