Breaking News

ஒசூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கழிப்பறைகள் பராமரிக்கப்படவில்லை எனக்கூறி மாநகர ஆணையாளரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மாநகராட்சியின் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் காலை,மாலை நூற்றுக்கணக்கானோர் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி மேற்க்கொள்ளும் நிலையில், கழிவறைகள் பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுவதாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

கழிப்பறைகள் பூட்டப்பட்டு, பராமரிக்காமல் இருந்து வந்ததை கடந்த மாதம் ஒசூர் மாநகர மேயர் சத்யா அவர்களும் ஆய்வு நடத்தியும் நடவடிக்கை இல்லை என்கிறநிலையில் விளையாட்டு மைதானம் அருகே விழிப்புணர்வு பேரணி துவக்க வந்த ஒசூர் மாநகர ஆணையாளர் ஸ்ரீகாந்த்  IAS அவர்களை நடைப்பயிற்சி மேற்க்கொண்ட 50க்கும் அதிகமானோர், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அதனைதொடர்ந்து இன்று மாலைக்குள் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுடன் பராமரிப்பாளரை நியமிக்க ஆணையாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்

No comments

Copying is disabled on this page!