சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த பிரபல யூடியூபர் மகனை புதுச்சேரி சைபர் க்ரைம் போலிசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கின்றார். அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகமில்லாத புதிய நபரிடமிருந்து ஒரு மெசேஜ் வருகிறது அதைத்தொடர்ந்து இருவரும் மெசேஜ் அனுப்புவது வீடியோக்களை அனுப்புவதன் மூலம் நண்பர்களாக பழகி உள்ளனர். பழகிய 15 நாட்களுக்குள் அந்த நபர், சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அவருடைய அந்தரங்க வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்ட துவங்குகின்றார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த பிரபல யூடியூபரான சிக்கா மற்றும் சுமியின் மகன் அஷ்ரப் என்பது தெரியவந்தது. மேலும் ரவுடிபேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா இவரின் சித்தி ஆவார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் மதுரை சென்று அஷ்ரப்பை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டியது தெரிய வந்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா, சுமி ஆகியோரையும் விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments