Breaking News

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 174 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 81 மாணவர்கள்,93 மாணவிகள் என மொத்தம் 174 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயம் வரவேற்பில் பழவேற்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.எல்.சி.ரவி முன்னிலையில் பள்ளி ஆசிரியர் தூயவன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்சிக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாணவ மாணவிகளிடையே ஊக்கமளிக்கும் உரையாடல் நிகழ்த்தி மிதிவண்டிகளை வழங்கினார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன்,வார்டு உறுப்பினர்கள் ஹாரூன்,அசினா அப்துல் சம்மது, கன்னிமுத்து அத்திப்பட்டு புருஷோத்தமன்,ஜெயராமன்,பழவை ஜெயசீலன்,ராஜீவ் காந்தி,எஸ்.எம்.சி தலைவர் ராச்சல்,துணை தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!