திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி எடுத்து ஆடி பக்தர்களை பரவசப்படுத்திய பெண்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்து கலைக் குழுவினர் காவடி ஆட்ட நிகழ்வை கோவில் முன்பு அரங்கேற்றினர். இதில் மேளதாளம் முழங்க இரண்டு பெண்கள் காவடி எடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடினர். இதனை அங்கு நின்ற பக்தர்கள் கண் அசராமல் கண்டு ரசித்தனர்.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments