Breaking News

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரை முற்றுகை இட காத்திருந்த மக்களால் பரபரப்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிட்கோ கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குவதில்   ஏற்பட்ட பிரச்சினை கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரை முற்றுகை இட காத்திருந்த மக்களால் பரபரப்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் சிட்கோ அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் சிட்கோ அமைக்க முடிவு எடுத்து குலசேகரபுரம் ஊராட்சி எல்லைக்குள் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்தது. சிட்கோக்கான அனுமதி வேண்டி கேட்ட போது குலசேகரபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது. தற்போது இதில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிட்கோவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற இருப்பதாக கூறப்படுகிறது.
 

இந்நிலையில் இன்று காலை குலசேகரபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பார்வையிட அமைச்சர் ஐ.பெரியசாமி வருவதாக இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு அமைச்சரை முற்றுகையிட்டு முறையிட வந்தனர்.


ஆனால் அமைச்சரின் வருகை ரத்து என தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள், சிட்கோ கட்டிடங்களுக்கு தங்களது ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி  ஊராட்சி மன்ற தலைவர் சி.முரளிதரன் தலைமையில் கிராம மக்கள் அங்குள்ள காளியம்மன் கோயில் வளாகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Copying is disabled on this page!