மரக்காணம் மேற்கு ஒன்றியம் திமுக செயலவீரர்கள் கூட்டம் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பங்கேற்பு
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஓமந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாட்டில், ஒன்றிய அவைத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம்,மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி,மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சீனிராஜ், நகர செயலாளர் கண்னன்,நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், புஷ்பவள்ளி குப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது நிர்வாகிகளிடம் கூறும் போது முதல்வரின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறினாலே போதும் வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைப்போம் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
மேலும் இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் சந்திரன், திருமலை, செந்தில்குமார், திலகவதி, ஒன்றிய நிர்வாகிகள் குமார், ராமமூர்த்தி, சரவணன், ரவிக்குமார், மீனா குமாரி ,முருகன் ,ஆதிகேசவன், ராமமூர்த்தி, தேவதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளிதாஸ், கிளைக் கழக செயலாளர் மணிகண்டன், ராஜாராமன் ,பிரகாஷ், சம்பத் ,சின்னதுரை, செல்வம், நரசிம்மர், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments