வாணியம்பாடி வளையாம்பட்டு சி.எல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு சி.எல் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இன்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து வெள்ளிக் கவச அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரத்தனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் பூஜைகள் செய்து வழிபட்டனர் அன்று அதிகாலை கோவில் வளாகத்தில் இருந்து பூ கரகம் பம்பை மேளம், நாதஸ்வரம் தவில் ,செண்டை மேளம் முழங்க, தேர் இழுத்து சடால் தேர்,மு க்கிய வீதிகள் திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.
பின்னர் மாலையில் கோவில் அருகில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது பூகரகம் வீதியுலா நிறைவடைந்து கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் திருவிழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழு சார்பாக ஏற்பாடு செய்தனர்.
No comments