காரைக்காலில் வழக்கறிஞர்கள் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.
காரைக்காலில் புதிய ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் நீதிமன்றத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. நீதிமன்றத்திற்கு புதுச்சேரியில் இருந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால் அவர்கள் விடுப்பு எடுத்து சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதேபோல இலவச சட்ட உதவி மையத்திற்கு கட்டிடம் கட்ட கோரியும் இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால் காரைக்கால் நீதிமன்றத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் நீதிமன்றத்தில் பணியாற்றும் 70 திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் வழக்குகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments