திருவள்ளூரில் விசிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற இருக்கும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற இருப்பதால் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை சி. நீலமேகம் ஆலோசனைப்படி சோழவரம் ஒன்றிய செயலாளர் வழுதிகை எ.ப. பிரகாஷ் தலைமையில் விசிக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் மாநாடு குறித்து பல்வேறு ஆலோசனைகளை ஒன்றிய செயலாளர் வழங்கினார். மாநாட்டிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுடன் கேட்டுக் கொண்டார். உடன் விசிக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
No comments