திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து அனைத்து துறை காலந்தாய்வு கூட்டம்.
அதேகொம்பிண்ணகம் அறங்காவலர் சீனுபெருமாள்,மாவட்ட கல்வி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தனர். வருகை புரிந்த அனைவரையும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சுமதி பெண் குழந்தைகளின் நடத்தை பற்றியும் மாணவ,மாணவிகளின் ஒழுக்க முறைகளை பற்றியும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை முறை பற்றியும் எடுத்து கூறினார்., தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்பியுள்ளதாகவும், மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளையும் அரசாங்கம் கற்று தருவதைப் பற்றியும் விளக்கமாக கூறினார். செந்தில்குமார் ஒருங்கிணைப்பாளர், பி.ஆர்.சி சூப்பர்வைசர் லட்சுமி நரசிம்மன், ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.செந்தில்குமார், வழக்கறிஞர் ஜெயசீலன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க தலைவர் முத்துகண்ணன், மேலும் அதேகொம் பெண்கள் ஆதார மையம் ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி எப்சிபா, செஞ்சி அதேகொம் பின்னகம் ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ, சமூக நலத்துறையின் சார்பாக பெண்கள் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெஜலட்சுமி, ஐ.சி.டி.எஸ் ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர்.
இறுதியாக திண்டிவனம் வட்டாட்சியர் சிவா கூட்டத்தில் நடைபெற்ற அனைத்து துறை சார்பாக கூறப்பட்ட கருத்துகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகை பிரியா, மயிலம் காவல் ஆய்வாளர் கமலஹாசன், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஜைனுதின், மயிலம் சமூக நல விரிவாக்க அலுவலர் கலா முதல் நிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வருகை தந்த அனைவருக்கும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் நன்றி கூறினார்.
No comments