வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி ஆய்வு.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால், புதிய கால்வாய் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி முன்னெச்சரிகை நடவடிக்கையாக கோரம்பள்ளம்குளம் நிறைந்து கடலுக்கு மழைநீர் வழிந்தோடும் பகுதியான அத்திமரப்பட்டி, முள்ளக்காடு போன்ற பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
உப்பாற்று ஓடையின் கழிமுகமான இந்த பகுதியில் மணல் திட்டுகள் மற்றும் முட்செடிகளை அகற்றி முழுமையாக சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த பணிகள் முடிவடையும் என்றார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments