Breaking News

தூத்துக்குடி பக்கிள் ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தூத்துக்குடி கேவிகே.நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் மணல் திட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாநகரில் பக்கிள் ஓடை எப்சிஐ குடோனில் துவங்கி திரேஸ்புரம் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து, மாநகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் என அனைத்து நீர்வழித்தடங்களையும் தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி கேவிகே.நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் மணல் திட்டுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் சிவக்குமார் (எ) செல்வின் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனடிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!