வாணியம்பாடி அருகே ஊஞ்சலில் விளையாடிய புடவையால் கழுத்து இறுக்கப்பட்டு மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.
வாணியம்பாடி அடுத்த அரப்பான்டகுப்பம், கிராமத்திலுள்ள புதுக்கோயில் வட்டத்தை சேர்ந்தவர் வேலு இவரது மகள் ரூபித்ரா (14), தும்பேரியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி சென்று வீடு மாலை வீடுதிரும்பிய மாணவி, அவரது வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் உள்ள புடவையால் செய்யப்பட்டு ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த போது, மாணவி புடவை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு விளையாடிய போது, எதிர்பாராவிதமாக புடவை மாணவியின் கழுத்தில் இறுக்கமானதால், கழுத்து நெறுக்கப்பட்டு மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை வேலு மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று திரும்பிய சிறுமியின் தாய் ஆகியோர் சிறுமி புடவையால் செய்யப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில், இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே ரூபித்ராவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் ரூபித்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் புடவையால் செய்யபட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த சிறுமி புடவை கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பு. லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
No comments