Breaking News

வாணியம்பாடி அருகே குளிர்பான கடையில் பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டு, உடைந்த கண்ணாடி துண்டுகளால் தாக்க வந்த நபர் மீது குளிர்பான கடையின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்.


வாணியம்பாடியை சேர்ந்தவர் சேகர், இவர் வாணியம்பாடியில் உள்ள சென்னை - பெங்களூர் புறவழிச்சாலையில், குளிர்பான கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மதுபோதையில்  வந்த நபர் ஒருவர், சேகரிடம் நான் இங்கு பெரிய ரவுடி எனக்கூறி  பணம் கேட்டு மிரட்டியுள்ளார், அப்பொழுது சேகர் பணம் தர மறுத்ததால் மதுபோதையில் இருந்த நபர் கடையில் இருந்த மிக்சி, மற்றும் கண்ணாடி கிளாஸ் மற்றும் பாட்டில்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து சேகரை தாக்க முயன்றுள்ளார், இதனால் சேகர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில்,  மதுபோதையில் இருந்த அந்த நபர் கடையில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்துச்சென்றுள்ளார். பின்னர் மதுபோதையில் அந்நபர் கீழே விழுந்த போது, அவரை சேகர் மற்றும் அவருடன் இருந்த நபர்கள் மீட்டு வாணியம்பாடி நகர காவல்நிலையம் அழைத்து வந்த போது, வாணியம்பாடி பேருந்து, மதுபோதையில் அந்நபர், மீண்டும், சேகரை தாக்கி அங்கிருந்து, தப்பியோட முயற்சித்த போது, அங்கிருந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர், மற்றும் காவலர்கள் தப்பியோடிய நபரை பிடித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுகுறித்து அந்நபரிடம் காவலர்கள் விசாரணை மேற்க்கொண்டு, தனிநபர் ஒருவருடன் அந்நபரை, காவல்துறையினர் காரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சேகர் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..

 - பு. லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் 

No comments

Copying is disabled on this page!