சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளத்தின் ஐதராபாத் தேசிய செயற்குழு முடிவைத் தொடர்ந்து, பழைய பென்சன் திட்டத்தினை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் திரு பாண்டி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,
- PFRDA சட்டத்தை ரத்து செய்து EPSல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மாநில அரசுகளும் திருப்பித் தருமாறு நிதி மேலாளர்களுக்கு உத்திரவிடவும், EPS 95ன் கீழ் அனைத்து சந்தாதாரர்களையும் பயனளிப்பு ஓய்வூதிய முறைகள் கொண்டு வரவேண்டும்.
- Contractual / Outsourced / Daily Waged நியமான முறையை ரத்து செய்து, அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்திட வேண்டும்.
- பொதுத்துறை / அரசுத்துறைகளை குறைப்பதை மற்றும் தனியார்மயப்படுத்தப்படுவதை உடனே நிறுத்திட வேண்டும்.
- ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட DAக்களை நிலுவையின்றி வழங்கிட வேண்டும்.
- அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்கள் / ஓய்வூதியர்கள் / ஒப்பந்த, தினக்கூலி ஊழியர்களுக்கும் உத்திரவாதப்படுத்திட வேண்டும்.
- தேசியக் கல்வி கொள்கையை (NEP) கைவிட வேண்டும்.
- அரசியலமைப்புத் திட்டத்தில் Art 310, 311 (2) a,b&c ல் திருத்தம் செய்யப்பட்ட புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
- அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதச்சார்பின்மையை நிலை நிறுத்திடவும், அனைத்து வகையான வகுப்புவாதங்களை எதிர்த்து போராட வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மறுவரையறை செய்திடவும், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை பாதுகாத்திட வேண்டும்.
- வருமான வரி உச்சவரம்பை 10 இலட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா மற்றும் தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மாநில செயலாளர் பாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் நிறைவுரையும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் மாரி நன்றியுரையாற்றினர். மேலும் மாவட்ட துணைத் தலைவர்கள் மூவேந்தன், வினோத் ராஜா, மாவட்ட இணைச் செயலாளர்கள் சின்னப்பன், பயாஸ் அகமது, மாவட்ட தணிக்கையாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments