கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான மின்கம்பம்: மின்வாரியம் அலட்சியம் காட்டுவதாக புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலா வள்ளி பூங்காத்தம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பிகள் தாழ்வாகவும், கம்பம் உடைந்து தொங்கும் நிலையிலும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கொடமாண்டபட்டி மின்வாரிய துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
No comments