ஆம்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மரக்கன்றுகள் நடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் மின்னுர் ஊராட்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் சின்னபள்ளிக்குப்பம் முகாமில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் கேம்பிரிட்ஜ் கேட்டரிங் இன்ஸ்டியூட் நிறுவனம் நெக்குந்தி மற்றும் தமிழ்நாடு வனத்துறை வாணியம்பாடி சரகம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா கேம்பிரிட்ஜ் கேட்டரிங் இன்ஸ்டியூட் நிறுவன தலைவர் பாரூக் பானு வேல் சேவியர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் வாணியம்பாடி வனசரக அலுவலர் குமார் கேம்பிரிட்ஜ் கேட்டரிங் இன்ஸ்டியூட் முதல்வர் லதா மோகன் கலந்து கொண்டு இலங்கை தமிழர் முகாமில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கி முகாமில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்பித்தார்கள்.
உடன் கேம்பிரிட்ஜ் கேட்டரிங் இன்ஸ்டியூட் ஆசிரியர் சுகந்தி மற்றும் துஷ்யந்தன் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் வாணியம்பாடி சரக வனத்துறை வனவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments