தெக்குப்பட்டு ஏரியில் சட்டத்திற்கு விரோதமாக ஏரியில் மண் கடத்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு ஊராட்சியில் அரசு அனுமதி ஏரியில் மண் எடுக்க அனுமதி கொடுத்தது. மூன்று அடி ஆழம் ஏரியில் மண் எடுக்க அனுமதி ஆனால் தெக்குப்பட்டு ஊராட்சியில் 15 அடிக்கு மேல் ஆழம்படுத்தி அந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்.
தெக்கப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் யுவராஜ் லாரி மூலம் ஜேசிபி இயந்திரங்களை வைத்துக்கொண்டு யுவராஜ் என்பவர் அரசு அனுமதி மாறாக 300 அடி நீளமும் 200 அடி அகலமும் சுமார் 15 அடி ஆழமும் இந்த மண்ணை ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி மூலம் மண்ணை எடுத்து ஒரு லோடு சுமார் 2000 முதல் 2500 வரை சட்ட விதிமுறைக்கு மாறாக சுமார் 3000 லோடுக்கு எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
எனவே நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்பார்வையிட்டு அனுமதி இன்றி மண்ணெடுத்து பகுதியை கலாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments