அரியாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி, மாணவர்களுக்கு சீருடை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்!
இதில், திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி மற்றும் மாணவர்களுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர்கள் பழநிராஜ், சுதா மற்றும் திமுக தொகுதி செயலாளர் சீத்தாராமன், அவைத் தலைவர் பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன், தொகுதி துணைச் செயலாளர் சிலம்பு செல்வன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் தியாகராஜன், நாகூர் மீரான், ஜெயபாலன், மதிவாணன், ஜபருல்லா, வெங்கடேசன், ரபேல், கிளைக் கழகச் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, சோமு, அஜிஸ்பாஷா, பாபு, சக்திவேல், மதுரைகுமார், கனகராஜ், சேகர், நடராஜன், பாஸ்கர், ஆறுமுகம், சேகர், அருள், ஜோதி, சபரி, கிரிதரன், மாணிக்கம், குப்பன், பரமசிவம், குப்புசாமி, குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments