புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா விடுத்துள்ள இரங்கல் செய்தி.
புதுச்சேரி மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தையின் அடிச்சுவடு தொட்டு பத்திரிகை துறையில் இணைந்து தற்பொழுது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வந்த திரு. அப்துல் ரகுமான் (54) அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்றிரவு (24.09.2024) காலமானார். காரைக்காலை பூர்வீகமாக கொண்டாலும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அத்துனை அரசியல் கட்சித் தலைவர்கள் இடத்தில் அன்பாக பழகக்கூடியவர்.
ஒரு பத்திரைகையாளர் என்பதை தாண்டி என்னிடம் என்றும் அன்பாக பழகுபவர். அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் தவறு என்று வரும்போது சுட்டிக்காட்டுவதும், தகுந்த நேரத்தில் நல்ல ஆலோசனைகள் வழங்கும் நண்பராகவும் இருந்தார். அதே நேரத்தில் செய்தி என்று வந்துவிட்டால் எதற்கும் சமரசம் ஆகாதவர். செய்திகளை முந்திக்கொடுப்பதில் வல்லவர். இப்படி இரவு, பகல் பாராமல் ஊடகத்துறையில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் திரு. அப்துல் ரகுமான் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும், புதுச்சேரி மாநில பத்திரிகை நண்பர்களுக்கும் எனது சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்.
No comments