Breaking News

ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் மற்றும் சிறுதானியங்கள் உணவு திருவிழா.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் மற்றும் சிறுதானியங்கள் உணவு திருவிழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

திட்ட இயக்குனர் மல்லிகா உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த உணவு திருவிழாவில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் இருந்து மகளிர் சுய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறு தானிய உணவுகள் தயார் செய்து காட்சி ப்படுத்தியதுடன், அதன் பலன்கள் பற்றி விளக்கம் அளித்தனர். இதில் சிறந்த உணவு தயாரிப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த உணவு திருவிழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் 

No comments

Copying is disabled on this page!