Breaking News

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு , மறுசுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய அட்டைகள் பழைய புத்தகங்கள் பேப்பர் போன்றவை தீயில் இருந்து சேதம்.


ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான கருங்கல்பாளையம் வரதப்பா நகரில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான அட்டை  குடோன் செயல்பட்டு வருகிறது, இங்கு மறுசுழற்சிக்காக பேப்பர் அட்டைகள், புத்தகங்கள்,பேப்பர், போன்ற பொருள்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடோனில் திடீரென ஏற்பட்ட  மின்கசிவின் காரணமாக குடோனில் தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது குடோனில்  வைக்கப்பட்டிருந்த அட்டைகளிலும் பேப்பர்களிலும் தீ  பிடித்துள்ளது, பின்பு ஆயில் அட்டைகள் போன்றவை அதில் இருந்ததால் தீ  மலமலவன  பரவத் தொடங்கி குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் 

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அனைத்தனர், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குடோனில் வைக்கப்பட்டிருந்த லட்ச மதிப்பிலான பேப்பர் அட்டைகள் புத்தகங்கள் போன்ற பொருள்கள் தீயில் எறிந்து சேதமடைந்தது, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!