மலைப்பகுதிகளில் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மலைப்பகுதியில் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி குடியாத்தம் உள்ளி மலைப்பகுதியில் விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்த மலைப்பகுதியில் 25.000 விதைப்பந்துகள் குடியாத்தம் திருமகள் ஆலை கலைக் கல்லூரியில் பயிலும் 100 மாணவ மாணவிகள் மூலம் துவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செந்தில்குமார் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஒன்றிய குழு தலைவர் சந்தானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத் குமார் உள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் துணைத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments