வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையின் போது நகைத் திருடன் சிவானந்தம் பிடிபட்டான்
குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த சிவா(எ ) சிவானந்தம் போலீசாரை கண்டவுடன் ஓடினான் சந்தேகம் அடைந்த போலீசார் அவனை துரத்தி பிடித்ததில் அவனிடம் 11 சவரன் தங்க நகை மற்றும் 770 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் 14 ம் தேதி நகை திருட்டு நடைபெற்று தேடப்பட்ட வந்த நிலையில் சிவானந்தம் கையும் காலமாக பிடிபட்டான்.
இவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை திருடி காடை மோகன் என்பவரிடம் கொடுப்பதாகவும் திருட்டு நகையினை விற்று சிவானந்தத்திற்கு காடை மோகன் பணம் கொடுப்பதும் தெரிய வந்தது இது குறித்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் வீராசாமி வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments