திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் நேரில் ஆய்வு செய்தார். திருநள்ளாறு காவல் நிலையம் அருகில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தற்பொழுது பழுதடைந்த நிலையில் விரைவில் அப்பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றும்படி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விரைவில் பள்ளியில் புதிய கட்டிடத்துக்கு மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நிர்வாக பொறியாளர் மகேஷ் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, மற்றும் அரசு அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments