பணியிட மாற்ற கலந்தாய்வில் குளறுபடி புறக்கணிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்கள். ஒழுங்குப்படுத்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான கலந்தாய்வு ஒருவிதமாக நடைபெற்றதாகவும் ஆனால் தமிழ் பாடத்திற்கான கலந்தாய்வில் பாதி பணி இடங்கள் மறைக்கப்பட்டு மீதமுள்ள இடங்களை மட்டுமே காலியான இடங்களாக காண்பிக்கப்படுவதால், இதனை கண்டித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 68 தமிழ் பாட ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களையும் காண்பிக்க வலியுறுத்தியும் தமிழ் ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தமிழ் பாடத்திற்கு 68 பணியிடங்கள் உள்ளதாகவும் இதில் ஹெஸ்ட் டீச்சர் அடிப்படையில் 29 பணியிடங்களை நிரப்பி விட்டு மீதமுள்ள 39 இடங்களுக்கு மட்டும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் இதில் உள்ள 39 ஆசிரியர்களும் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் எனவும் எனவே மொத்தமாக உள்ள 68 இடங்களையும் காலியிடங்களாக காண்பித்தால் மட்டுமே கலந்தாய்வில் தாங்கள் கலந்து கலந்து கொள்ளவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments