வாணியம்பாடி நியூ டவுன் டிவிஜி நகரில் அமைந்துள்ள பூங்காவில் இன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் கலாம் காமராஜ் அறக்கட்டளை சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது,
வாணியம்பாடி நகராட்சி பூங்காங்களை பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆல், அரசு, வேம்பு, அத்தி, மந்தாரை, புங்கன், நாவல், பாதாம், மந்தாரை, வேங்கை உட்பட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
திமுக நகர செயலாளர் திரு.சாரதிகுமார் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க மாநில உறுப்பினர் முருகன், மாவட்ட பொருளாளர் பாண்டியன், முத்தமிழ் மன்ற செயலாளர் பிரகாசம், நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வன், தென்னரசு, கலாம் காமராஜ் அறக்கட்டளை தலைவர் விஜய்ஆனந்த், வேர்கள் அறக்கட்டளை வடிவேல் சுப்ரமணியன், APJ அப்துல்கலாம் ட்ரஸ்ட் சேதுராமன், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.
No comments