தலைமறைவாக இருந்த அரசு மருத்துவர் பாபு திருச்சி மாநகர போலீஸாரால் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் மருத்துவர் பாபு இவர் கடந்த வாரம் செப் -1 ஆம் தேதி அன்று தனியார் செவிலியர் கல்லூரி மாணவி தலைமை மருத்துவர் பாபுவிடம் இரண்டாம் ஆண்டு பயிற்சிப்படிப்பு முடிவு சான்றிதழில் கையெழுத்து பெறுவதற்காக மாணவி சென்றதாக கூறப்படும் நிலையில் அப்போது எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது, இந்நிலையில் அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார் இதனை அடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள்.
புகார் மனுவை விசாரித்த குடியாத்தம் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்த்ததில் அங்கு மருத்துவர் பாபு தலைமறைவு ஆனதாக தெரிந்ததை அடுத்து குடியாத்தம் காவல்துறையினர் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு மருத்துவர் பாபுவின் புகைப்படத்தை அனுப்பிய நிலையில் ஒரு வார காலமாக தேடி வந்த நிலையில் மருத்துவர் பாபுவை திருச்சி மாநகர காவல் துறையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து குடியாத்தம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பாபுவை குடியாத்தம் நீதிமன்ற நீதிபதியிடம் நேரில் அழைத்துச் சென்ற பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
- குடியாத்தம் தாலுக் செய்தியாளர் A. தென்காந்தி
No comments