அத்திப்பட்டு புது நகரில் ஈரோடெஃப் புதிய டீசல் வெளியேற்ற திரவ நிலையம் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு புது நகரில் ஈரோடெஃப் புதிய டீசல் வெளியேற்ற திரவ நிலையம் திறக்கப்பட்டது. டீசல் என்ஜின்கள் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கம், பெட்ரோல் என்ஜின்களுக்கு மாறாக, மானுடவியல் காலநிலை மாற்றத்திற்கான காரணமான கரியமில வாயு அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் விதத்தில் டீசல் வெளியேற்ற திரவம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் மாசுவை கட்டுப்படுத்தும் விதத்திலும் கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் விதத்திலும் வாகனங்களை இயக்க முடியும் இதற்கான நிலையம் அத்திப்பட்டு புது நகரில் புதிதாக திறக்கப்பட்டது.
திமுக திருவெற்றியூர் பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.மா.அருள்தாசன், சென்னை வடக்கு மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் ரியாசுதீன், ஏ.ஜி.எஸ் எண்டர்பிரைசஸ் வெளியீட்டாளர் கிரிஜா கமலேஸ்வரி ஆகியோர் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிறுவன உரிமையாளர் எம்.வஜ்ரவேல் ஏற்பாடு செய்தார்.
பின்னர் டீசல் வெளியேற்ற திரவம் ஏற்ற தயார் செய்யப்பட்ட வாகனங்களுக்கு திரவம் நிரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments