அன்னவாசல் முன்னாள் திமுக செயலாளர் நினைவு தினத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கிய அவரது குடும்பத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் திமுக முன்னாள் செயலாளர் எம்.எஸ். அக்பர் அலியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தினர் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அன்னவாசல் அரசுமருத்துவமனைக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில் முன்னதாக அன்னவாசல் பேருந்து நிலையம் அருகே சட்டத்துறை அமைச்சர், ரகுபதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நகர கழக பொருப்பாளர் ரிஷாஅக்பர் முன்னிலையில் மறைந்த எம்.எஸ்.அக்பர்அலியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான எக்ஸ்.ரே கருவி, ஈ.சி.ஜீ கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்னவாசல் தலைமை மருத்துவர் மணியனிடம் அமைச்சர்கள், ரகுபதி, மெய்யநாதன், அன்னவாசல் நகர கழக பொருப்பாளர் ரிஷாஅக்பர் ஆகியோர் வழங்கினர்.
இதில் மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், மாரிமுத்து, தொழில் அதிபர்கள் மன்சூர், நஜீமுதீன், அன்னவாசல் முத்தவல்லி சுக்கூர் ஹாஜியார், இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாக்கத்அலி, பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், பேக்கரி மணி, ராப்பூசல் செந்தில், பேரூராட்சி கவுன்சிலர் கெளதர், பிரபா, வழக்கறிஞர் உஷாராணி, துணை செயலாளர் மதியழகன், ஐடிவிங்ஸ் முகமது இலியாஸ், புரோஸ்கான், அறிவழகன் கவியரசன், நாகராஜ் சந்தோஷ், ஒன்றிய பிரதிநிதி கருப்பையா, முத்துக்குமார், மாங்குடி அண்ணாத்துரை, மற்றும் கணேசன், சலீம்இஸ்லாமில் ரகுமத்துல்லா, ஜின்னா, சேகர், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், ஜமாத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அன்னவாசல் பேரூர் பொருப்பாளர் ரிஷா அக்பர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments