வில்லியனூர் அரசு பள்ளிகளுக்கு ரூ. 1.5 லட்சம் செலவில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மூலம் கம்யூட்டர் மற்றும் உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஜோஸ் ஆலூக்காஸ் நிறுவனம் தமது 60–ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமது சமூக பங்களிப்பு நிதி மூலமாக இரண்டு கம்ப்யூட்டர், இரண்டு ஸ்டீல் பெஞ்ச், ஆசிரியர்கள் அமரக்கூடிய நாற்காலி ஏழு என ரூபாய் 78 ஆயிரத்து 550 மதிப்பிலும், வில்லியனூர் தென்கோபுர வீதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளிக்கு 20 டெஸ்க், பென்ச் என ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலும் மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 550 ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கியது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்து கொண்டு, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வழங்கிய உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸின் புதுச்சேரி கிளை மேலாளர் நிஜோ, கணக்காளர் சதீஷ், பிஜூ மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் அமல்ராஜ், தலைமை ஆசிரியர்கள் பிரபு கணேஷ், பஞ்சாத்தம்மா உள்பட ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments