Breaking News

பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு.


பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு. பூமியில் புதைக்கப்பட்ட பைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வான்நோக்கி புகை மண்டலமாக கக்கி வருவதால் பரபரப்பு.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல்சாவடியில் தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பூமி வழியே குழாய் பதிக்கப்பட்டு இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. 


இந்த சூழலில் கொசஸ்தலை ஆற்றை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய பகுதியில் பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் பலத்த சத்தம் எழுந்தது. மேலும் குழாயிலிருந்து தொடர்ந்து எரிவாயு வான் நோக்கி மணலுடன் பீச்சி அடிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது. 


தொடர்ந்து சென்னைக்கு அனுப்பக்கூடிய இந்த இயற்கை எரிவாயுவை தனியார் நிறுவன அதிகாரிகள் நிறுத்தி உள்ளதாகவும் குழாயில் சென்றிருந்த எரிவாயு மீண்டும் திரும்பி வருவதால் கசிவு முற்றிலுமாக நிறுத்த சிறிது நேரம் ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!