Breaking News

ஆத்திரேயமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர், பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்திரேயமங்கலம் கிராமத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர், அருள்மிகு பொன்னியம்மன், அருள்மிகு துலுக்கானத்தம்மன், அருள்மிகு லட்சுமி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. 


இந்த ஆலயங்களின் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. 


இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


இந்த கும்பாபிஷேக விழாவில் சிலம்பம் திரைப்பட இயக்குனர் மற்றும் தென்னிந்திய திரைப்பட  ஸ்டன்ட் இயக்குனர் டாக்டர் ஏ.கே. ஜோதி, சீனிவாசன், துலக்காணம், வெங்கடேஷ், சங்கர்,  மற்றும் ஆத்திரேயமங்கலம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!