ஆசிரியர் தினத்தை ஒட்டி, எம் எல் ஏ ஆசிரியர்களை வாழ்த்தியதோடு அனைவரையும் மேடைக்கு அழைத்து பேனா பரிசளித்து புகழ்ந்து பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்க வந்திருந்த பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் விழாவில் ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர்களை அவர்களின் பணிகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்து பேசி புகழாரம் செய்தார் தாய் தந்தைக்கு மேல் ஆசிரியர்கள் என புகழ்ந்தார்.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தை ஒட்டி அனைத்து ஆசிரியர்களையும் மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து அனைவருக்கும் தனது சொந்த செலவில் பேனா பரிசளித்தார் இந்த செயல் அனைவரையும் பாராட்ட செய்தது மாணவர்கள் கைத்தட்டி உற்சாக ப்படுத்தினர் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.
No comments