நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் கோட் திரைப்படத்தை காண ரசிகர்கள் உற்சாகம்.
நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் விஜயா மற்றும் ரத்னா ஆகிய இரண்டு திரையரங்குகளில் இந்த படம் இன்று காலை வெளியிடப்பட்டது. இதனை ஒட்டி படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் பேனர்கள் போஸ்டர்கள் மற்றும் வண்ணமயமான தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
ரசிகர்களின் விளம்பரங்கள் தியேட்டர் முன்பு பெரிய எல் இ டி திரையில் திரையிடப்பட்டன. தொடர்ந்து திரளான ரசிகர்கள் முதல் காட்சியில் ஆரவாரத்துடன் உள்ளே சென்று விஜய் வாழ்க என்று கூறி திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
No comments