Breaking News

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்திற்கு தமிழக பகுதிகளான ஓசூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 


இந்த நிலையில் பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் பூக்களின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 


இதில் செவ்வந்திப்பூ 300 ரூபாய்க்கு, ரோஜாப்பூ 200 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ 800 ரூபாய்க்கு, சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ 1200 ரூபாய்க்கும் என ஐந்து மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

No comments

Copying is disabled on this page!