Breaking News

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

 

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா  நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வர் திருமதி. உஷா குமாரி அவர்கள் வரவேற்றார். பள்ளி சேர்மன் திரு. எஸ்.பி. குமரேசன் அவர்கள் தலைமையுரையாற்றினார். விழாவின் தலைமை விருந்தினராக ஐஎன்எஸ் பருந்து கமாண்டர் வினோத் அவர்கள் பங்குபெற்று தேசியக்கொடியினை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். 

விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல ஆலோசகர் திரு. சி. ரமேஷ்கண்ணன் பங்கேற்றார். பின்னா் மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவா்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றி தொடா் ஓட்டமாக வந்து ஜோதியினை ஏற்றி வைத்தனா். தொடர்ந்து தலைமை விருந்தினர் கமாண்டர் வினோத் அவர்கள் சிறப்புரையாற்றினார். 


அவர் பேசுகையில் பள்ளி மாணவா்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் தங்களது திறன்களை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்ற விளையாட்டு வாய்ப்புகளை மாணவா்கள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என வலியுறுத்தி பேசினாா். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திரு. சி. ரமேஷ்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு உடற்பயிற்சி நடனம்,  யோகா, ஏரோபிக்ஸ்,  பிரமிடு மற்றும் சிலம்பம், டேக்வொண்டோ போன்றவற்றில் மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா்.  


பின்னர் தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள், தனிநபா் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று ஆகாஷ் பாசறைக் குழு கோப்பையினை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி துணைச் சேர்மன் திரு. கே. அருண்குமார் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 


மாணவர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் திருமதி. பிரேம சித்ரா அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.   விழாவில் பெற்றோர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!