டீ கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரங்களில் டீக்கடைகள் இயங்கி வருகிறது இந்த நிலையில் அந்த பகுதியில் சனிக்கிழமை இரவு செயல்பட்டு வந்த ஜானு பேக்கரி டீக்கடைக்கு இரண்டு இளைஞர்கள் போதையில் வந்தனர் அப்பொழுது டி-ஷர்ட் அணிந்திருந்த இளைஞர் காசு கொடுக்காமல் இஞ்சி டீ கொடுக்குமாறு கேட்டு முதலில் தகராறு செய்தார் அதன் பின் கடையில் இருந்த டீ மாஸ்டர் காசு வாங்காமலேயே இஞ்சி டீ போட்டு கொடுத்தபோது அதனை வாங்கிய போதை ஆசாமி கண்ணாடி கிளாசில் இருந்த டீயுடன் சேர்த்து கீழே போட்டு உடைத்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்தார் அதேபோல் அவருடன் வந்த இளைஞர் காசு கொடுக்காமல் தான் வாங்கி வந்த பூஸ்ட் பாக்கெட்டை டீ மாஸ்டரிடம் கொடுத்து பூஸ்ட் பால் போட்டு கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்தார்.
பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்களும் டீ பூஸ்ட் கேட்டு டீ மாஸ்டரிடம் தகராறு செய்த நிலையில் காசு வாங்காமல் இருவருக்கும் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போட்டு கொடுத்த பின்பு டீ கிளாஸ் உடைத்தும் அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர் இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது இந்த நிலையில் வம்பு இழுத்த இரு இளைஞர்களும் தினசரி இரவு நேரத்தில் போதையில் வந்து டீ கடையில் தகராறு செய்துவதோடு அங்கு இருப்பவர்களிடம் வீண்வம்பு வாங்கி செல்வதாக கடையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றனர் அவர்களை மறுநாள் வரும்போது தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து அவர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments