Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுப்பத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் காட்டுநெமிலி பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்தை அரசு பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் கண்ணாடியை உடைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர் அரசு பேருந்து தொடர்ந்து காட்டு நெமிலி கிராமத்தில் நிற்காமல் சென்று வருவதாக கூறி போலீசாரிடமும் அரசு பேருந்து ஓட்டுநர் இடமும் பொதுமக்களும் அரசு பள்ளி மாணவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!