விவசாயிகள் கோரிக்கை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர்.
கடந்த 2023 ஆண்டுக்கு சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு தொகை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதில் சம்பந்தப்பட்ட இப்கோ டோக்கியோ நிறுவனம் சரியான முறையினை பின்பற்றாத காரணத்தினால் எழுந்த பிரச்சனையும் கடந்த ஆண்டு சம்பா அறுவடையின் போது பெய்த மழையினால் சுமார் முப்பதாயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் ரூபாய் 10 கோடி கான நஷ்ட மதிப்பீடு செய்யப்பட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் அத்தொகையும் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் 24 9 2024 அன்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களை காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குரு கோபி கணேசன் தலைமையில் செயலாளர் முட்டம் எம். ராஜாராமன் கடகம் பிரபாகரன் சித்தர் காடு பாரி ஆகியோர் சந்தித்து முறையிட்டதன் பேரில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு டைரக்ட் சோவின் ஃபெயிலியர் விதிமுறையின் படி ஈட்டுத்தொகையும் மழையினால் ரூபாய் 10 கோடி அளவிற்கான பாதித்த பயிர்களுக்கான தொகை யிணையும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
No comments