மயிலாடுதுறை மாவட்ட குறுவட்ட போட்டிகளில் தருமபுரம் ஆதீன பள்ளி மாணவ, மாணவிகள் 74 பேர் பதக்கம் வென்று சாதனை, மாணவ மாணவிகளுக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி நேரில் வாழ்த்து.
மாவட்ட அளவிலான போட்டிகளில் 50 பேர் பங்கேற்று 42 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும் மேசைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இதுபோல் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 74 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
கோகோ கூடைப்பந்து வளைக்கோல் பந்து, இறகு பந்து, மேசைப்பந்து, கேரம் மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் புரவலரான தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருள் ஆசி வழங்கினார்.
தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், பள்ளியின் ஆட்சி மன்ற குழு துணை தலைவர்கள் எஸ்.முருகேசன் ஆர்.ஞானசேகரன் பொருளாளர் டி.சுப்பிரமணியன் செயலர் எஸ்.பாஸ்கர் நிர்வாக செயலாளர் வி.பாஸ்கர் பள்ளியின் முதல்வர் ஆர்.சரவணன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments