புதுச்சேரியில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான டீ பாபுவை 5 பேர் கொண்ட கும்பல் சரமாறியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவர் ரவுடி தொழிலை கைவிட்டு விட்டு, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனிகளுக்கு டீ காண்ட்ராக்ட் எடுத்து, காலை, மாலை என இருவேளை அங்குள்ள கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பைக்கில் சென்று டீ கொடுக்க பாபு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் பாபுவை சரமாறியாக வெட்டியது.இதில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரங்கராஜ் என்பவருக்கும், பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரங்கராஜ் தனது கூட்டாளியுடன் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதில் தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments