புதுச்சேரியில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு முதல்வா் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வா் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினாா். வணிகவரித் துறை கருத்தரங்கத்தில் நடந்த கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினா்.
அதிகாரிகள் கருத்தைக் கேட்ட முதல்வா், டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதிகள் முழுவதும் தூய்மைப் பணிகளையும், மருந்து தெளிக்கும் பணியையும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினாா். கூட்டத்தில் ஆணையா் மற்றும் அரசுச் செயலா் ராஜூ, மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன், சுகாதாரத் துறை பொறுப்பு இயக்குநா் செவ்வேள், விசிஆா்சி விஞ்ஞானி ஸ்ரீராம், சுகாதாரத் துறை சாா்புச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments