போக்குவரத்து விதிமீறலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் செலுத்தாதவர்கள் மீது கோர்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை .
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் துறையினரால் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக, கடந்த, 2022, 2023 மற்றும் 2024,ம் ஆண்டுகளில், போக்குவரத்து விதி மீறியவர்கள் மீது 'இ-செலான் ஸ்பாட் பைன்' இயந்திரம் மூலம் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதனை ஆன்லைன் மூலம் செலுத்தும் படி, அனைவரின் மொபைல்ளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பலர் இதுநாள் வரை, குறிப்பிட்ட அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர்.
அவர்கள் அனைவரும், வரும், அக்., 1, தேதியில் இருந்து வரும், 7,ம் தேதி வரையில் புதுச்சேரியில் உள்ள சம்மந்தப்பட்ட நான்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களிலோ அல்லது https://echallan.parivahan.gov.in என்ற ஆன்லைன் முறையிலோ செலுத்தலாம். அவ்வாறு அபராத தொகை செலுத்தாதவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும் இடைக்கால தடை செய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments