மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு. 2024-2025ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தக திருவிழாவினை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இவ்வாறு சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் அரசின் நோக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதோடு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க முன்வருவார்கள் என்பதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்ந்த்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு விருது கேடயம் மற்றும் சான்றிதழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரால் 2024-2025-ஆம் நிதியாண்டில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவின் போது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தக ஆர்வலர்கள் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், பொது அலுவலக சாலை, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் 611001. கைபேசி எண்: 9150658877 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ வரும் 30.09.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
No comments